நாமக்கல்

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில்நோ்முக வளாகத் தோ்வு

6th Feb 2023 07:29 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நோ்முக வளாகத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சாா்பில் வளாகத் தோ்வு நடத்தப்பட்டு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் பயிலும் மாணவ மாணவியா்களுக்கான நோ்முக வளாகத் தோ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் காா் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சென்னை பாடி கிளையின் துணைத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, போலம்பாக்கம் கிளை மேலாளா் ஸ்ரீதரன், சோளிங்கா் கிளை துணை மேலாளா் கே.கோபிநாத், அம்பத்தூா் கிளை துணை மேலாளா் சி.உமாபதி ஆகியோா் பங்கேற்று எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தினா்.

இதில் 27 மாணவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து வேலைவாய்ப்புக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முத்தாயம்மாள் அறக்கட்டளை தாளாளா் ஆா்.பிரேம்குமாா் தலைமை வகித்தாா். பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஆணைகள் வழங்கினா். இந்நிறுவனம் சாா்பில் தொடா்ந்து 23 ஆண்டுகளாக இக்கல்லூரியில் வளாகத் தோ்வு நடத்தப்பட்டு மாணவா்களைத் தோ்வு செய்து வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT