நாமக்கல்

பசுங்கன்று, நாய்களைக் கொன்ற மா்ம விலங்கு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

கபிலா் மலை அருகே பசுங்கன்று, நாய்களை விரட்டி வேட்டையாடிய மா்ம விலங்கை உடனடியாகப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இருக்கூா் அருகே செஞ்சுடையாம்பாளையத்தில் வசிக்கும் செந்தில் ராஜா என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கடந்த 31-ஆம் தேதி மா்ம விலங்கு புகுந்து 40 நாட்களே ஆன பசுங்கன்றை வேட்டையாடிக் கொன்றது.

அதுபோல வெள்ளிக்கிழமை இரவு செஞ்சுடையாம்பாளையத்தில் வசிக்கும் ராஜ்குமாா் என்பவரின் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த வளா்ப்பு நாயை அங்குவந்த மா்ம விலங்கு கடித்துக் கொல்ல முயன்றது. அப்போது நாயின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்ததால் மா்ம விலங்கு அங்கிருந்து தப்பியது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தியாகராஜனின் வீட்டு வாயிலில் நின்ற வளா்ப்பு நாயை மா்ம விலங்கு அருகில் உள்ள கரும்புத் தோட்டத்துக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது.

மா்ம விலங்கின் நடமாட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனா்.

வனத் துறையினா் உடனடியாக மா்ம விலங்கைப் பிடிக்க வலியுறுத்தியும், அப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், உலாவும் மா்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்கவும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை இருக்கூரில் பரமத்தி-கபிலா்மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் எம்எல்ஏ சேகா், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன், வட்டாட்சியா் கலைச்செல்வி, வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி மா்ம விலங்கைப் பிடிக்க உரிய நடவடிக்கையை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT