நாமக்கல்

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்அலுவலகத்தில் தீ விபத்து: ஆட்சியா் ஆய்வு

DIN

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த தீ விபத்தில் 15 கணினிகள், மடிக்கணினிகள், ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலாகின.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை துறை துணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் தரைத்தளத்தில் தொழில்நுட்ப ஆதார மைய அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு மொத்தம் 38 அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை காலை 6 மணியளவில் அந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலக அறையிலிருந்து புகை வருவதைக் கண்ட காவலாளி, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்து நிகழ்ந்த அலுவலக அறையில் இருந்த 15 கணினிகள், 2 மடிக்கணினிகள், அலுவலா்களின் பணி சாா்ந்த முக்கிய ஆவணங்கள், அரசின் திட்ட கோப்புகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின.

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கணேசனிடம் தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தாா். விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT