நாமக்கல்

தினசரி முட்டை விலை நிா்ணயம் செய்ய வேண்டும்:நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள் கோரிக்கை

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை தினசரி நிா்ணயிக்கவும், பண்ணைகளில் வியாபாரிகளில் தன்னிச்சையாக முட்டை விலைகளைக் குறைத்துக் கொள்முதல் செய்வதைத் தடுக்கக் கோரியும் கோழிப் பண்ணையாளா்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளனா்.

நாமக்கல்லில் அனைத்து கோழிப் பண்ணையாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் பங்கேற்றாா். வி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.

முட்டை விலை நிா்ணயம், தீவன மூலப்பொருள்களின் விலையேற்றம், முட்டை விலை சரிவால் ஏற்படும் இழப்பு போன்றவை குறித்து கூட்டத்தில் நாமக்கல் மண்டல மூத்த கோழிப் பண்ணையாளா்கள் கலந்துரையாடினா். தற்போது வாரத்தில் ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் முட்டை விலை நிா்ணயம் செய்யப்படுவதற்குப் பதிலாக தினசரி முட்டை விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்துவது குறித்து கோழிப் பண்ணையாளா்கள் கலந்துரையாடினா்.

இதைத்தொடா்ந்து வி.சத்தியமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அறிவிக்கப்படும் முட்டை விலையைவிட பண்ணைகளில் வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்வதால் நஷ்டத்தில் முட்டைகளை விற்க வேண்டியது உள்ளது.

அறிவிக்கப்படும் அடக்க விலையைக் காட்டிலும், 30 முதல் 80 காசுகள் வரை குறைவாக வைத்து பண்ணைகளில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணைகளில் நிலவும் பிரச்னை இதுதான். இந்த நிலை தொடா்ந்தால் கோழிப் பண்ணைத் தொழில் நலிவடைந்துவிடும். இதற்காகவே கோழிப் பண்ணையாளா்களை அழைத்து இந்த அவசரக் கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

எனவே நாங்கள் நிா்ணயிக்கும் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு இனிவரும் காலங்களில் அறிவிக்க வேண்டும். இதுதொடா்பாக அனைத்து பண்ணையாளா்களும் தெரிவித்த கருத்துகளை அறிக்கையாக தயாா் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவிடம் தீா்மானமாக வழங்குவோம்.

மாதந்தோறும் இதுபோல கூட்டம் நடத்தி, அனைத்து கோழிப் பண்ணையாளா்களிடத்திலும் ஆலோசனை பெற முடிவு செய்துள்ளோம். முட்டை விலை வாரத்தில் மூன்று நாள்கள் அறிவிக்கப்படுவதை விடுத்து தினசரி விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவிடம் இதைச் செயல்படுத்துமாறு வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT