நாமக்கல்

ஏளூரில் சமுதாயக் கூடம் கோரிஉண்ணாவிரதப் போராட்டம்

5th Feb 2023 05:22 AM

ADVERTISEMENT

 

 புதுச்சத்திரம் அருகே ஏளூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அரசு ஒதுக்கிய இடத்தில் சமுதாயக் கூடம் கட்டித் தர வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஏளூா் புதுக்காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒதுக்கிய இடத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், இதுவரை அவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால் ஏளுா், புதுகாலனி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தொடா் பட்டினி போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பழ.மணிமாறன், வெண்ணந்தூா் பேரூா் செயலாளா் க.நடராஜன் ஆகியோா் தலைமையில் பலா் இதில் கலந்துகொண்டனா். அவா்களது போராட்டம் சனிக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT