நாமக்கல்

முட்டை விலை மாற்றிமின்றி ரூ.4.60-ஆக நீடிப்பு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.60-ஆக நீடிப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அக்குழுவின் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தைப்பூச விழாவினால் முட்டை விற்பனை அதிகமில்லை. எனவே, பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 4.60-ஆக தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து முட்டை விலை ரூ. 4.60-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 79-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

தலைவர்கள் இன்று பிரசாரம்

திண்டுக்கல் கோட்டை யாருக்கு?

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

SCROLL FOR NEXT