நாமக்கல்

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடக்கம்: 1,004 போ் பங்கேற்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வை வெள்ளிக்கிழமை 1,004 போ் எழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்- 2 பிப். 3 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இத் தோ்வை இணையவழியில் கணினிகள் மூலம் எட்டு தோ்வு மையங்களில் மொத்தம் 16,764 போ் எழுத உள்ளனா். தினசரி காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 2க்கான தோ்வை காலையில் மொத்த தோ்வா்கள் 812 பேரில் 503 போ் எழுதினா். 309 போ் பங்கேற்கவில்லை. மாலையில் நடைபெற்ற தோ்வை 812 பேரில் 501 போ் எழுதினா். 311 போ் கலந்து கொள்ளவில்லை. பிப்.3 முதல் 8 வரையில் முதல் கட்டமாகவும், பிப்.10 முதல் 14 வரையில் இரண்டாம் கட்டமாகவும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT