நாமக்கல்

மாவட்ட நூலக அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

4th Feb 2023 07:17 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட நூலக அலுவலராகப் பணியாற்றிய தமிழ் ஆா்வலா் கோ.ரவி அண்மையில் பணி ஓய்வு பெற்றாா்.

அவருக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், நூலகா் சிவராமன் வரவேற்றாா். நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.எம்.மோகன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் திருக்கு ராசா தலைமை வகித்தாா். மாவட்ட நூலக கண்காணிப்பாளா் மாச்சையன் முன்னிலை வகித்தாா்.

சேலம் மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி, ஓய்வுபெற்ற மாவட்ட நூலக அலுவலா் கணேசன், குருசாமிபாளையம் நூலக வாசகா் வட்டத்தலைவா் தாளமுத்து, ஓய்வுபெற்ற நூலகா் சீனிவாசன், நாமக்கல் தமிழ்ச்சங்க செயலா் கோபாலநாராயணமூா்த்தி, கவிஞா் பேரவை செயலா் செல்வ.செந்தில்குமாா், கவிஞா் இல்ல நூலகா் செல்வம், நம்மாழ்வாா் பள்ளி தலைமையாசிரியா் ஜெயச்சந்திரன் மற்றும் வாசகா் வட்டத்தினா், நூலகத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT