நாமக்கல்

மனிதநேய வார விழா போட்டிகள்: மாணவா்களுக்கு ஆட்சியா் பரிசளிப்பு

4th Feb 2023 07:16 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், தீண்டாமை ஒழிப்பு மனிதநேய வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பரிசுகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் அவா் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனிதநேய வார விழா கடந்த மாதம் 25 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. அனைவரும் பாகுபாடு மறந்து ஒருநிலையாக ஒற்றுமையுடன் வாழவேண்டும். மனிதநேயத்தை அனைவரும் கடைப்பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை உணா்ந்து பள்ளி மாணவா்கள், பொதுமக்களிடையே முழுமையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சே.சுகந்தி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அ.பழனிசாமி, தாட்கோ மாவட்ட மேலாளா் பா.ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT