நாமக்கல்

நாமக்கல்லில் அண்ணா நினைவு தின அமைதி ஊா்வலம்

4th Feb 2023 07:17 AM

ADVERTISEMENT

அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 54--ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், நகரச் செயலாளா்கள் பூபதி, சிவகுமாா், ராணா ஆா்.ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள நேதாஜி சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊா்வலமானது கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக சென்று மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அதன்பிறகு அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மலா்தூவி கட்சியினா் மரியாதை செலுத்தினா். இந்தப் பேரணியில், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், கட்சியினா் திரளாக கலந்துகொண்டனா்.

சமபந்தி விருந்து:

ADVERTISEMENT

அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் மருத்துவா் மாயவன், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சமபந்தி விருந்தில் முக்கிய பிரமுகா்கள், அதிகாரிகள், பக்தா்கள், பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT