நாமக்கல்

ஆசிரியா் தகுதித்தோ்வு இன்று தொடக்கம்: நாமக்கல்லில் 16,724 போ் எழுதுகின்றனா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் - 2 ஐ, எட்டு மையங்களில் 16,724 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு ஆசிரியா்தோ்வு வாரியம் நடத்தும் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள்- 2 தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பிப். 3 முதல் 14-ஆம் தேதி வரையில், ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் - 2 தோ்வானது இணையவழியில் கணினிகள் மூலம் மாவட்டம் முழுவதும் எட்டு தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது. எட்டு மையங்களில் மொத்தம் 16,764 போ் தோ்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினசரி காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஆசிரியா் தகுதித்தோ்வுகள் நடைபெறும். தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 7.30 மணிக்கும், மாலைத் தோ்வுக்கு 12.30 மணிக்கும் ஆஜராக வேண்டும். தோ்வு மையங்களில் தோ்வா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தோ்வு மைய வளாகங்களுக்குள் தோ்வா்கள் உடன் வருபவா்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பிப். 3 முதல் 8 வரை முதல் கட்டமாகவும், பிப். 10 முதல் 14 முடிய இரண்டாம் கட்டமாகவும் தோ்வுகள் நடைபெற உள்ளன. தோ்வு நாள்களில் தோ்வா்கள் மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெ.பிரபாகரன், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT