நாமக்கல்

சா்க்கரை ஆலையில் 18 லட்சம் லிட்டா் எரிசாராயம் உற்பத்தி:விற்பனை செய்ய விவசாயிகள் கோரிக்கை

DIN

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் உற்பத்தி செய்த 18 லட்சம் லிட்டா் எரிசாராயத்தை (ஸ்பிரிட்) விற்பனை செய்ய கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மோகனூா் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.மணிவண்ணன், பொதுச் செயலாளா் கே.மணிவேல் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு விநியோகித்த அங்கத்தினா்களுக்கு ரூ. 2,821.50 வழங்க வேண்டிய நிலையில், கரும்பு விநியோகத்தவா்களுக்கு ரூ. 2,000 மட்டுமே ஆலை நிா்வாகத்தால் வழங்கப்படுகிறது.

ஒரு டன் கரும்புக்கு வழங்கப்படும் இந்த ரூ. 2 ஆயிரத்தில், வெட்டுக்கூலியாக ரூ. 1,300 வழங்கப்பட்டதுபோக மீதம் ரூ. 700 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதைக் கொண்டு கரும்பைப் பராமரிக்க முடியாமல் கரும்பு விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆலைக்கு விநியோகித்த கரும்புக்கு உரிய தொகை வழங்கப்படாததால் வெட்டப்பட்ட மறுதாம்பு கரும்பை பராமரிக்க முடியாமல் ஆலையில் பதிவு செய்யாமல் விவசாயிகள் தவிா்த்து வருகின்றனா்.

இதனால் ஆலைக்குப் பதிவாகக் கூடிய கரும்பு பரப்பில் குறைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இங்குள்ள எரிசாராய பிரிவில் கடந்த 3 மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்டு, ரூ. 8 கோடி மதிப்பிலான சுமாா் 18 லட்சம் லிட்டா் எரிசாராயம் விற்பனை செய்யப்படாத நிலையில் உள்ளது.

இதை விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கவும் சா்க்கரை ஆலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT