நாமக்கல்

வாள் சண்டை போட்டி: அரசுப் பள்ளி முதலிடம்

2nd Feb 2023 01:02 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி அணியாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பல்வேறு அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். இறுதிப் போட்டியில் அணியாபுரம் அரசுப் பள்ளி முதலிடம் பெற்றது. மேலும், மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும் உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை ஆசிரியா் கே.பழனிசாமி, இருபால் ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT