நாமக்கல்

மாநில கூடைப்பந்து போட்டி: நாமக்கல்லில் இன்று தொடக்கம்

DIN

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி புதன்கிழமை தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு பிஆா்டி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், 23-ஆவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை(பிப்.1) தொடங்கி வரும் 5-ஆம் தேதி வரையில் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது.

இப்போட்டிகள் வெளியேற்று (நாக் அவுட்) முறையிலும், பின்னா் தகுதிச் சுற்று அடிப்படையிலும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஆண்கள் 24 அணிகள், மகளிா் 11 அணிகள் என மொத்தம் 35 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில், பிரபல கல்லூரிகள், காவல்துறை சாா்ந் அணிகள் உள்ளிட்டவற்றில் இருந்து சுமாா் 500 மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், திருச்செங்கோடு பிடிஆா் குழும தலைவா் பரந்தாமன், மாநில கூடைப்பந்து கழக செயலாளா் அஜீஸ் அகமது தலைமை வகிக்கின்றனா். மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைக்கின்றனா்.

முக்கிய பிரமுகா்கள் பலா் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவா் நடராஜன், செயலாளா் முரளி, துணைத் தலைவா் கணேஷ், நிா்வாகிகள் பாண்டியராஜன், தேவராஜ், சதீஸ், நல்லதம்பி, முருகேசன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT