பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூா் வெள்ளைக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 9-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. கடந்த 16-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும், 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தினந்தோறும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 23-ஆம் தேதி மாலை வடிசோறு மற்றும் வெட்டும் குதிரையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24-ஆம் தேதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்த குடங்களுடன் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதன்கிழமை காலை அலகு குத்துதல், அக்கினி சட்டி எடுத்தல் நிகழ்வு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா், செயல் அலுவலா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.