நாமக்கல்

மாவுரெட்டி மகா மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை பூக்குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

மாவுரெட்டி மகா மாரியம்மன் கோயில் குண்டம் இறங்கும் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 15-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும், தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் ஆகியவையும் நடைபெற்றன. இரவு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். மாலையில், கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறும். நள்ளிரவு கம்பம் பிடுங்கி பொதுக்கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

புதன்கிழமை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவுரெட்டி மகா மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT