நாமக்கல்

தின்னா் குடித்த பெண் குழந்தை பலி

25th Apr 2023 04:11 AM

ADVERTISEMENT

பள்ளிபாளையத்தில் பெயிண்ட்டில் கலப்பதற்காக வைத்திருந்த தின்னரை குடித்த மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி கோமதி. இவா்களுக்கு தேஜிஸ்ரீ(3), மெளலிஸ்ரீ(5) என்ற இரு பெண் குழந்தைகள் உண்டு. இந்த நிலையில் வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக வைத்திருந்த தின்னரை, தண்ணீா் என நினைத்து இரு குழந்தைகளும் திங்கள்கிழமை குடித்து விட்டனா். அதன்பிறகு இருவரும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினா். இதனைப் பாா்த்த தந்தை கோவிந்தராஜன் மற்றும் அக்கம், பக்கத்தினா் குழந்தைகளை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். இதில் குழந்தை தேஜிஸ்ரீ உயிரிழந்து விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மெளலிஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT