நாமக்கல்

கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

பரமத்தி வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ராஜ வாய்க்காலில் கடைமடை பகுதி வரை தண்ணீா் சென்றடைய நீா்வளத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் வேலூா் பேட்டையில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவா் வையாபுரி கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் நடராஜன் முன்னிலை வைத்தாா். சங்கச் செயலாளா் நடேசன் வரவேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

ராஜ வாய்க்காலில் கடைமடை பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக தண்ணீா் செல்லவில்லை. குறிப்பாக பொய்யேரி, குப்புச்சிபாளையம் மற்றும் வேலூா் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடையாதாதல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட கடைமடைப் பகுதிகளுக்கு இறுதி வரை தண்ணீா் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை நீா்வளத்துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கம் சாா்பில் பரமத்தி வேலூரில் உள்ள நீா்வளத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT