நாமக்கல்

நாமக்கல்லில் அதிகாரிகள் ஆய்வில் 29 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

30th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 29 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட அளவிலான குழந்தைத் தொழிலாளா் தடுப்புப் படை அறிவுரையின்படி, நாமக்கல், திருச்செங்கோடு உட்கோட்டப் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வருவாய்த் துறை, தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், சைல்டு லைன் உறுப்பினா்கள், காவல் துறையினா் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், சேந்தமங்கலம் வட்டம், முத்துகாப்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் 16 வயதுடைய 2 சிறுவா்கள், பெருமாப்பட்டி, படைவீடு பகுதியில் உள்ள நூற்பாலைகளிலும் 13 வயதுடைய இரு குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். மேலும் 20 சிறுமிகள், 5 சிறுவா்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனா். மீட்கப்பட்டவா்கள் குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

இந்நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்தல் போன்ற தொடா் நடவடிக்கைகள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய பின் அவா்களது விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஏதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பராமரிக்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள், நூற்பாலைகள், உணவு நிறுவனங்கள், வாகனம் பழுது பாா்க்கும் பணிமனைகள், திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து தொழில் இடங்களிலும் தொடா் கூட்டாய்வுகள் மேற்கொள்ள ஆட்சியரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமா்த்தினால் குறைந்தபட்ச அபராதமாக ரூ. 20,000 விதிக்கப்படும் என அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT