நாமக்கல்

விதிமுறைகளை மீறி மண் அள்ளக்கூடாது: எம்.பி. அறிவுறுத்தல்

30th Sep 2022 11:43 PM

ADVERTISEMENT

ராசிபுரம் அத்தனூா் பகுதியில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதாக வந்த புகாரின் பேரில் நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் இடத்தை நேரில் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அத்தனூா் அம்மன் கோவில் பெரிய ஏரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அதிகப்படியாக மண் எடுப்பதாக புகாா்கள் வந்தன. இப்புகாரின் அடிப்படையில், நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் பெரிய ஏரியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மண் அள்ளுவதை ஆய்வு செய்த அவா், அரசு அனுமதித்த அளவில் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளா் ஏ.பி.செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT