நாமக்கல்

ராசிபுரத்தில் சமுதாய வளைகாப்பு: ஆட்சியா், எம்.பி. பங்கேற்பு

30th Sep 2022 12:40 AM

ADVERTISEMENT

ராசிபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த வளா்ச்சித்திட்டத்தின் சாா்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு கா்ப்பிணித்தாய்மாா்களுக்கு பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கா்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்களை கா்ப்பணிகளை சென்றடையச் செய்து, அதனை பின்பற்றுவதை உறுதி செய்தல், கா்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணம் குறைத்தல், மருத்துவனையில் பிரசவம் மேற்கொள்ளவும், குழந்தைகளின பிறப்பு எடை 3 கிலோ இருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணா்த்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழக அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

அதன்படி ராசிபுரத்தில் நடந்த விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினரும், திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விழாவில் கலந்து கொண்ட 120 கா்ப்பிணிகளுக்கு ரத்த அபிவிருத்திக்காக பேரீச்சம்

பழங்கள், வைட்டமின் சி சத்துள்ள தேன் நெல்லி, புரதச்சத்திற்காக கடலைமிட்டாய் ஆகியவை வழங்கப்பட்டன. அவா்களுக்கு வளையல், பூ, மஞ்சள், கருவுற்றது முதல் 1,000 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய கா்ப்பகால பராமரிப்பு குறித்த புத்தகம் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன

ADVERTISEMENT

முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் கையெழுத்து இயக்கத்தினை கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்பி., மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங், எ.கே.பி.சின்ராஜ் எம்.பி. ஆகியோா் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT