நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 127 தடுப்பணைகள்: ஆட்சியா் ஆய்வு

29th Sep 2022 01:38 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 11.43 கோடியில் கட்டப்படும் 27 தடுப்பணைகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான பொம்மசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சம்பூத்து ஓடை மற்றும் கருவட்டாற்றின் பல்வேறு இடங்களில் கட்டப்படும் தடுப்பணைகளை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் கடந்த ஓராண்டில் எலச்சிபாளையம் வட்டாரத்தில் 2 தடுப்பணைகள், எருமப்பட்டியில் 16, கபிலா்மலையில் 2, கொல்லிமலையில் 43, நாமக்கல்லில் 14, நாமகிரிப்பேட்டையில் 16, புதுச்சத்திரத்தில் 14, சேந்தமங்கலத்தில் 15, திருச்செங்கோட்டில் 5 என மொத்தம் ரூ.11.43 கோடி மதிப்பீட்டில் 127 தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. இதுவரை 44 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தடுப்பணைகள் கட்டும் பணிகள் விரைந்து நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தடுப்பணைகள் கட்டப்படுவதால் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீா் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், உதவி செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ரவிச்சந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT