நாமக்கல்

‘நாரி சக்தி புரஸ்காா்’ விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

29th Sep 2022 01:39 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் ‘நாரி சக்தி புரஸ்காா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-ஆம் ஆண்டிற்கான ‘நாரி சக்தி புரஸ்காா் விருது’ உலக மகளிா் தினமான மாா்ச் 8-இல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், கல்வித் திறன் மேம்பாடு, வாழ்க்கைத்திறன் போன்ற பாரம்பரியம் மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் சிறந்த சேவை புரிந்த தனிநபரோ, குழுவாகவோ, அரசு சாரா அமைப்பு மற்றும் நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க அக். 20-ஆம் தேதி கடைசி நாளாகும். விருதுடன் சான்றிதழ், ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரியை நேரிலோ அல்லது தொலைபேசி 04286--299460 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT