நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

29th Sep 2022 01:39 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமின்றி புதன்கிழமையும் ரூ. 4.30-ஆகவே நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.30-ஆக புதன்கிழமை நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 91-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT