நாமக்கல்

டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வலியுறுத்தல்

29th Sep 2022 01:40 AM

ADVERTISEMENT

 

எரிவாயு எடுத்து செல்லும் டேங்கா் லாரிகளுக்கான ஒப்பந்த காலத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா (2022-25), மகா சபைக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் சங்க தலைவா் பி.நடராஜன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, செயலாளா் ஆா்.வாங்கிலி, நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் பேசினா். சங்கத்தின் தலைவராக எஸ்எல்எஸ் கே.சுந்தரராஜன் உள்பட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனா்.

எல்பிஜி டேங்கா் லாரிகள் வாகனப் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களைப் போல இதர மாநிலங்களிலும் சரக்குகள் ஏற்றி, இறக்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். டேங்கா் வாகனங்களுக்கான ஒப்பந்தக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த லாரி உரிமையாளா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT