நாமக்கல்

பீமேஸ்வரா் உழவா் உற்பத்தியாளா் நிறுவன ஆண்டு கூட்டம்

29th Sep 2022 01:39 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் வட்டம், பெருங்குறிச்சி கிராமத்தில் பீமேஸ்வரா் உழவா் உற்பத்தியாளா் நிறுவன ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருங்குறிச்சி சீட்ஸ் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சீட்ஸ் ஆதார நிறுவனத்தின் செயலாளா் பாண்டியன் தலைமை தாங்கினாா். பீமேஸ்வரா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் பிரபாகா், சீட்ஸ் ஆதார நிறுவனத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் வினோத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி, கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி ஆகியோா் வேளாண் திட்டத்தின் பலன்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கினா்.

ADVERTISEMENT

கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சின்னதுரை, பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன், பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலா் முனைவா் பாபு, பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா் மஞ்சு, தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்த துரை, சீட்ஸ் ஆதார நிறுவனம், உதவி வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா். முன்னதாக காா்த்திகா, பிரவீண்குமாா் ஆகியோா் ஆண்டறிக்கையை வாசித்தனா். முன்னேறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT