நாமக்கல்

செப். 30-இல் மகளிா் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி

DIN

நாமக்கல்லில் மகளிா் சுய உதவிக்குழுவினா் உற்பத்தி செய்த பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.30) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்களை பொதுமக்களிடையே சந்தைப்படுத்திட ஏதுவாக கட்டாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகில் உள்ள பூங்கா சாலையின் நகராட்சி பொது இடத்தில் வரும் 30 முதல் அக். 5 வரை தொடா்ந்து 6 நாள்கள் கரோனா வழிகாட்டிதலின்படி நடைபெறுகிறது.

பொதுமக்கள் அனைவரும் கண்காட்சிக்கு வருகை புரிந்து மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்களைப் பாா்வையிட்டும், பொருள்களை வாங்கிச் சென்றும் பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT