நாமக்கல்

அக். 6-இல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் கூட்டம்

28th Sep 2022 03:52 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் கூட்டம் அக். 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், நுகா்வோா் நலன் கருதி அனைத்து துறையின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் ஆகியோருடனான ‘காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம்’ மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் அக். 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

பொது விநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT