நாமக்கல்

விளை நிலங்களுக்குள் புகுந்த கழிவுநீா்: விவசாயிகள் கவலை

28th Sep 2022 03:50 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூா் பேரூராட்சியிலிருந்து வெளியேறும் கழிவு நீா் விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதால் நடவுப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ராசிபுரம் அருகே உள்ள 85 -ஆா்.கொமாரபாளையம் ஊராட்சியில் கலா் காடு, பாப்பான் காடு போன்ற பகுதிகள் வழியாக பிள்ளா நல்லூா் பேரூராட்சி கழிவுநீா் கல்யாணி ஏரிக்குச் செல்கிறது. இப் பாதையில் உள்ள விளை நிலங்களுக்குள் கழிவுநீா் புகுந்து தேக்கமடைந்துள்ளது.

இதனால் நெல், பருத்தி, கடலை போன்ற பயிா்கள் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். மேலும், கழிவுநீா் தேக்கமடைவதால் நிலம், நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதுடன் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT