நாமக்கல்

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

28th Sep 2022 03:54 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் பி. பொன்னுசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

மோட்டாா் வாகனச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT