நாமக்கல்

ரபி பருவத்தில் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அழைப்பு

27th Sep 2022 04:07 AM

ADVERTISEMENT

 

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களுடைய பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2022--23 ஆம் ஆண்டு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் நெல் - (சம்பா), சிறிய வெங்கயாம், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, பருத்தி, சோளம், கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் தக்காளிப் பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களுடைய பயிா்களை புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்க் காப்பீடு செய்து பயனடையலாம்.

ADVERTISEMENT

ஒரு ஏக்கருக்கு பிரிமீயத் தொகையாக நெல் (சம்பா) பயிருக்கு ரூ. 337.16-ஐ வரும் டிச.-15-க்குள் செலுத்தவேண்டும். சோளப் பயிா் ஏக்கருக்கு ரூ. 129.68, நவ.30-க்குள் செலுத்தவேண்டும்.

மக்காச்சோளப் பயிா் ஏக்கருக்கு ரூ. 431.26, நவ. 30, நிலக்கடலை பயிா் ஏக்கருக்கு ரூ. 311.22 செலுத்த டிச. 31 கடைசி நாளாகும். பருத்தி பயிா் ஏக்கருக்கு ரூ. 539.34-ஐ 2023 மாா்ச் 15-க்குள் செலுத்தவேண்டும். பச்சைப்பயறு மற்றும் உளுந்து பயிா் ஏக்கருக்கு தலா ரூ. 206.74-ஐ நவ. 15-க்குள் செலுத்த வேண்டும். கரும்பு பயிா் ஏக்கருக்கு ரூ. 2,914.60-ஐ மாா்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்.

மேலும், தோட்டக்கலை பயிா்களான சிறிய வெங்காயப் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 1,990.82-ஐ நவ. 30க்குள் செலுத்த வேண்டும். வாழை பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 1,803.10-ஐ பிப். 15-க்குள் செலுத்த வேண்டும். தக்காளி பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 988-ஐ அடுத்த ஆண்டு ஜன. 31-க்குள் செலுத்தவேண்டும். மரவள்ளி பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 1,541.28-ஐ பிப். 28-க்குள் செலுத்த வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இதர வங்கிகள் மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழிக் கடிதம் அளித்து பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT