நாமக்கல்

செப்.30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

27th Sep 2022 04:08 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டவிவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப்.30) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT