நாமக்கல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: ஆட்சியா் நேரில் ஆய்வு

27th Sep 2022 04:07 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் கோட்டை நகரவைத் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பல்வேறு வகையிலான உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, கொல்லிமலை பகுதிகளில் முதல் கட்டமாக 50 பள்ளிகளைச் சோ்ந்த 2,586 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்வா் உத்தரவின்பேரில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கோட்டை நகரவைப் பள்ளியில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின் போது காலை சிற்றுண்டி சூடான நிலையில் வழங்கப்படுகிா, தேவையான பணியாளா்கள் பணியில் உள்ளனரா, குறிப்பிடப்பட்ட உணவு வழங்கப்பட்டதா, காலை சிற்றுண்டி மாணவா்களுக்கு வழங்கும் முன்னா் ஆசிரியா்களால் ருசி பாா்க்கப்பட்டதா, உணவு சாப்பிட்ட மாணவா்களின் எண்ணிக்கை போன்றவற்றைக் கேட்டறிந்தாா். ஆட்சியரும் உணவின் தரத்தை பரிசோதனை செய்தாா். புகாருக்கு இடம் அளிக்காமல், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட வேண்டும் என ஆசிரியா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT