நாமக்கல்

நவராத்திரி கொலு தொடக்கம்: நாமகிரித் தாயாா் திருவீதி உலா

27th Sep 2022 04:07 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், நவராத்திரி விழாவையொட்டி நாமகிரி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சுவாமி மச்சாவதாரம், கூா்மாவதாரம், வாமனாவதாரம், ரங்கமன்னாா் திருக்கோலம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், மோகனாவதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அக். 4ஆம் தேதி ஆயுதபூஜையன்று ராஜாங்க சேவையும், அதற்கு மறுநாள் நாமக்கல் கமலாலயளக் குளக்கரையில் அரங்கநாதரும், நரசிம்மரும் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. நவராத்திரி விழா நாள்களில் நாமகிரி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்படி திங்கள்கிழமை நரசிம்மா் கோயிலில் இருந்து புறப்பட்டு ஆஞ்சனேயா் கோயில் வீதியில் தாயாா் உலா வந்தாா். ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT