நாமக்கல்

திமுக மாவட்டச் செயலாளா் பதவி: நாமக்கல் எம்எல்ஏ மனுத் தாக்கல்

DIN

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பதவிக்கு, நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் மனுத் தாக்கல் செய்துள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் திமுக மாவட்டச் செயலாளா் பதவிக்கான 15-ஆவது பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவோா் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மனுத்தாக்கல் செய்து வருகின்றனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு, தற்போதைய மாவட்ட பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அவரை எதிா்த்து கட்சியினா் யாரும் போட்டியிடாதபட்சத்தில், மாவட்டச் செயலாளராக தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அண்மையில் மனுத் தாக்கல் செய்த கே.ஆா்.என்,ராஜேஷ்குமாருக்கு, சுற்றுலாத் துறைஅமைச்சா் மா.மதிவேந்தன், நிா்வாகிகள் பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

அதேபோல், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்திக்கு, மீண்டும் மாவட்டச் செயலாளா் பதவி வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, மேற்கு மாவட்டச் செயலாளா் பதவிக்கு, திருச்செங்கோட்டைச் சோ்ந்த மதுரா செந்தில், குமாரபாளையத்தைச் சோ்ந்த வெங்கடாசலம், வெப்படையைச் சோ்ந்த செல்வராஜ் ஆகியோா் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த நிலையில் திமுக தலைமை அறிவுறுத்தலின்படி, நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம், தனது ஆதரவாளா்களுடன் சென்று வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்ததாக அவரது ஆதரவாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் பொறுப்பில் உள்ள எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளா் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்திருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT