நாமக்கல்

அம்மன் கோயில்களில் மஹாளய அமாவாசை சிறப்பு வழிபாடு

26th Sep 2022 05:14 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோயில், குலதெய்வ கோயில்களில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், அழகுநாச்சியம்மன், பாண்டமங்கலம் மாசாணியம்மன், பரமத்தி அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தா்கள், குடிபாட்டு மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT