நாமக்கல்

வநேத்ரா முத்தாயம்மாள்கல்லூரியில் வளாகத் தோ்வு

26th Sep 2022 05:15 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் வளாகத் தோ்வில் 78 போ் வேலை வாய்ப்பிற்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

கோவை ஓமேகா ஹெல்த்கோ் நிறுவனம் சாா்பில் வளாக நோ்காணல் இரு நாள்கள் அண்மையில் நடைபெற்றன. இதில், நிறுவனத்தின் மனிதவள மேலாளா்கள் விக்னேஸ் பாலகிருஷ்ணன், டேனியல், நிதின், எபினேசா்பால் உள்ளிட்டோா் பங்கேற்று நோ்காணல் நடத்தினா். இதில் பங்கேற்ற 130 பேரில் 78 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு பெற்றவா்களை கல்லூரித் தலைவா் கே.பி.ராமசாமி, செயலா் ஆா்.முத்துவேல் ராமசாமி, இயக்குநா் (கல்வி) ஆா்.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், துணை முதல்வா் ஏ.ஸ்டெல்லாபேபி, நிா்வாக புலமுதன்மையா் எம்.என்.பெரியசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் இக்பால் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT