நாமக்கல்

மோகனூரில் நாளை இளைஞா் திறன் திருவிழா

26th Sep 2022 05:15 AM

ADVERTISEMENT

 

மோகனூா் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 27) இளைஞா் திறன் திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின்கீழ் மோகனூா் வட்டாரத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக, தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநா், உதவி செவிலியா், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி பயிற்சி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவுத் தயாரித்தல், கைப்பேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகளை வழங்கி தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞா்கள் தோ்வும் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மோகனூா் சுப்ரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

எனவே, இம்முகாமில் மோகனூா் வட்டாரத்தைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT