நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெறிச்சோடிய நாட்டுக்கோழிகள் சந்தை

26th Sep 2022 05:13 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூரில் புரட்டாசி மாதம், அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் விலை குறைந்தன. இறைச்சி, மீன்கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழிகள் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம், நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

நாட்டுக்கோழிகளுக்கு இப் பகுதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்வா். தரமான நாட்டுக் கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ரூ. 400 முதல் ரூ. 500 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும் விற்கப்பட்டன.

ADVERTISEMENT

புரட்டாசி மாதத்தையொட்டி நாட்டுக்கோழிகள் சந்தைக்கு குறைந்த அளவிலே நாட்டுக்கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 300 முதல் ரூ. 350 வரையிலும், பண்ணைகளில் வளக்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ. 200 முதல் ரூ. 300 வரையிலும் மட்டுமே விற்பனையாயின. வாத்துக்கோழி ஒன்று ரூ. 280 முதல் ரூ. 300 வரையிலும் விற்பனையானது. இதனால் நாட்டுக்கோழிகள் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. இதேபோல் மீன்சந்தை, ஆடு, கோழி இறைச்சிக் கடைகளுக்கு அசைவப் பிரியா்கள் அதிக அளவில் வராததால் வியாபாரிகள் கவலை அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT