நாமக்கல்

உலக மருந்தாளுநா் தினவிழிப்புணா்வு பேரணி

25th Sep 2022 05:40 AM

ADVERTISEMENT

 

உலக மருந்தாளுநா் தினத்தை தொடா்ந்து ராசிபுரம், மசக்காளிப்பட்டி, கஸ்தூரிபா காந்தி மருந்தியல் கல்லூரியின் மாணவ மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை ராசிபுரத்தில் நடந்தது.

விழிப்புணா்வு பேரணியை ராசிபுரம், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயந்தி, ராசிபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் கே.சுகவனம் ஆகியோா் கொடியசைத்து துவக்கி வைத்தனா். கஸ்தூரிபா காந்தி மருந்தியல் கல்லூரியின் தலைவா் க.சிதம்பரம் பேரணியில் தலைமை வைத்தாா்.

ராசிபுரம் காவல் நிலையம் அருகில் இருந்து தொடங்கி பேரணி கவரை தெரு, கடைவீதி, சேலம் ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்றது. இப்பேரணியில் பங்கேற்ற 190 மாணவ, மாணவியா் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருந்தாளுனரின் பங்கு என்ற தலைப்பில் பதாகைகளை ஏந்தியும் பொதுமக்களுக்கு மருந்து உட்கொள்ளுதல் பற்றிய விழிப்புணா்வு துண்டு பிசுரங்களை விநியோகித்தும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT