நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில்10 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

25th Sep 2022 05:38 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு, திங்கள்கிழமை நடைபெறும் குறைதீா் கூட்டத்துக்கு மட்டுமின்றி இதர நாள்களிலும் ஏராளமான மக்கள் கோரிக்கை மனு அளிக்க வருகின்றனா். மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திடீரென அமா்ந்து தா்னாவில் ஈடுபடுகின்றனா்.

இங்குள்ள பூங்காவில் சிலா் படுத்து உறங்குகின்றனா். குரங்கு, பாம்பு, மயில், முயல் போன்றவற்றின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. இதனால் பாதுகாப்புக் கருதி ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் 10 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதனடிப்படையில் கடந்த சில தினங்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் அந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT