நாமக்கல்

புரட்டாசி முதல் சனிக்கிழமை:பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

25th Sep 2022 05:38 AM

ADVERTISEMENT

 

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா்.

ஒவ்வோா் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் நைனாமலை, தலைமலை கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். கரடு, முரடனான பாதையில் பக்தா்கள் மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க செல்வா். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதிக்கு பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அடிவாரப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உற்சவா் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனா்.

ADVERTISEMENT

தற்போது கரோனா தொற்று தடை முழுமையாக நீங்கி விட்டதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலாவது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் நரசிம்மா் மற்றும் நைனாமலை பெருமாள் கோயில்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனா். அனைத்து கோயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT