நாமக்கல்

சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா

25th Sep 2022 05:38 AM

ADVERTISEMENT

 

மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.செல்லப்பன். தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டிருந்த இவருக்கு, கடந்த 1953-ஆம் ஆண்டில் ‘சிலம்பொலி’ என்ற பட்டத்தை சொல்லின் செல்வா் என அழைக்கப்படும் இரா.பி.சேதுப்பிள்ளை வழங்கினாா்.

உலக தமிழ் மாநாட்டுக்கு சிறப்பு மலா் தயாரித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி தமிழுக்கு பெரும் பங்காற்றிய சிலம்பொலியாா் 2019, ஏப்.7-ஆம் தேதி 91-ஆவது வயதில் காலமானாா்.

ADVERTISEMENT

ஒவ்வோா் ஆண்டும் செப்.24 அவருடைய பிறந்த தினமாகும். அதன்படி, சிலம்பொலி சு.செல்லப்பன் 94-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் புதிதாக அமையும் மணி மண்டபத்தின் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிலம்பொலியாா் உருவப் படத்துக்கு தமிழறிஞா்கள், அரசியல் கட்சியினா், குடும்பத்தினா், உறவினா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT