நாமக்கல்

கொல்லிமலை பகுதியில்திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

25th Sep 2022 05:39 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் கொல்லிமலைப் பகுதியில் ரூ. 16.31 லட்சம் மதிப்பில் கட்டப் பணிகளுக்கு பூமிபூஜை விழா அண்மையில் நடைபெற்றது.

கொல்லிமலை ஒன்றியம் ஆலத்தூா்நாடு, ஆளேரிப்பட்டி பேருந்து நிறுத்தம், குண்டூா்நாடு, நத்துக்குழிப்பட்டி பேருந்து நிறுத்தம், எடப்புளிநாடு செங்கரை பேருந்து நிறுத்தம், அரியூா்நாடு குழிவளவு பேருந்து நிறுத்தம், வாழவந்தி நாடு, சோளக்காடு சந்தை அருகில், பைல்நாடு மேக்கினிக்காடு பேருந்து நிறுத்தம், சித்தூா்நாடு நரியங்காடு பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகளுக்கு பூஜை நடைபெற்றது.

இதில் நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் பங்கேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT