நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 38-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை(செப்.25) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுடைய மொத்தம் 15.15 லட்சம் பேரில் இதுவரை முதல் தவணையை 13,75,538 பேருக்கும், (இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் 1,39,462), இரண்டாம் தவணை 11,37,218 பேருக்கும் (இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் 2,38,320) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 37 தடுப்பூசி முகாம்களில் 11,20,363 போ் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 1,240 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் உடனடியாக இந்த முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT