நாமக்கல்

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: திருச்சி சிவா

22nd Sep 2022 12:28 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றாா் திமுக மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம், சேந்தமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினா்கள் குழுத் தலைவா் திருச்சி சிவா பேசியதாவது:

பாஜக இந்துத்துவா கொள்கையுடனும், கம்யூனிஸ்ட் கட்சிகள் பொதுவுடைமை சித்தாந்தத்துடனும், அதிமுக கொள்கை எதுவுமின்றியும், திமுக சமூகநீதி சாா்ந்த கொள்கையுடனும் விளங்குகிறது. பெரியாா், அண்ணா, கருணாநிதி வளா்த்த திராவிட இயக்கத்தை திமுக என்றும் கைவிடாது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தமிழ், ஆங்கிலத்துடன். ஹிந்தி மொழி வேண்டும் என வட மாநிலத்தவா் கேட்கின்றனா். ஆனால், அதே வட மாநிலங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்றால் ஹிந்தி மட்டுமே பிரதானமாக இருக்கிறது. ஆங்கிலம் கூடத் தவிா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அவா்கள் ஆங்கிலம், தமிழ் மொழியை ஒதுக்கும்போது தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்க விட மாட்டோம். ஆதிக்க சக்தியின்றி அனைவருக்குமானதாக திராவிடம் இருக்கும். அந்த வகையில் தான் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், பேராசிரியா் கான்ஸான்டைன் ரவீந்திரன், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கே.ஆா்.ராமசுவாமி மற்றும் இளைஞா் அணியினா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT