நாமக்கல்

பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் கறவை மாடுகள் வாங்க மானியம்

22nd Sep 2022 12:28 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ள தாழ்த்தப்பட்டோருக்கு, கறவை மாடுகள் வாங்க திட்டத் தொகை ரூ. 1.50 லட்சத்துக்கு தாட்கோ ரூ. 45 ஆயிரம் மானியமாக வழங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 500 பேரி-ல் 450 ஆதிதிராவிடா்களுக்கும், 50 பழங்குடியினருக்கும் இத்திட்டத்தின் கீழ் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் மானியமாக ரூ. 2.25 கோடி, வங்கிக் கடன் ரூ. 4.87 கோடி என முடிவு செய்யப்பட்டு கறவை மாடு வாங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்திற்கு 11 ஆதிதிராவிடா்களுக்கு மானியமாக ரூ. 45 ஆயிரம் வீதம் ரூ. 4.95 லட்சமும், பழங்குடியினா் 3 பேருக்கு தலா ரூ. 45 ஆயிரம் வீதம் ரூ. 1.35 லட்சமும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவராக இருத்தல் வேண்டும். 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விவசாயம் சாரந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தின்கீழ் நிா்ணயிக்கப்படும் திட்டத் தொகை ரூ. 1.50 லட்சத்தில் 30 சதவீத மானியம் அதாவது ரூ. 45 ஆயிரம் மானியமாக விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடா் பயனாளிகள் இணைதளத்திலும் மற்றும் பழங்குடியினா் இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT