நாமக்கல்

நாமக்கலில் நாளைய மின் தடை

20th Sep 2022 03:45 AM

ADVERTISEMENT

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 21) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் சீ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூா், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT