நாமக்கல்

அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் தாா்சாலை அமைக்க பூமிபூஜை

20th Sep 2022 03:48 AM

ADVERTISEMENT

நாமக்கல் தொகுதியில், அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தாா்சாலை அமைக்க பூமிபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் சிவியாம்பாளையம் ஊராட்சியில் ரூ.43.93 லட்சம் மதிப்பீட்டில் 11 பணிகளுக்கும், வகுரம்பட்டி ஊராட்சியில் ரூ.57.19 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகளுக்கும், சிலுவம்பட்டி ஊராட்சியில் ரூ.36.42 லட்சம் மதிப்பீட்டில் 8 பணிகளுக்கும், கோனூா் ஊராட்சியில் ரூ.38,48 லட்சம் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கும் (மொத்தம் 42 பணிகள் ரூ. 176.02 லட்சம் மதிப்பீடு) பூமி பூஜை செய்து பணிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். மேலும், கோனூா் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை பிரித்து வழங்க நெகிழி தொட்டிகளை வழங்கியும் சுகாதாரம் குறித்த பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ரா.சுமதி, அட்மா குழுத் தலைவா் வி.கே.பழனிவேல், சிவியாம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவா் க.கோபி, வகுரம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் ராஜரகுமான், சிலுவம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் சி.பழனிவேல் மற்றும் கோனூா் ஊராட்சி மன்றத் தலைவா் பி.மணிவேல் மற்றும் பா. மணிகண்டன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருளாளன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT