நாமக்கல்

அண்ணா மிதிவண்டிப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

18th Sep 2022 05:56 AM

ADVERTISEMENT

 

மாவட்ட ஆளவிலான அண்ணா மிதிவண்டிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.70,500 பரிசுத் தொகையை அமைச்சா் எம்.மதிவேந்தன் வழங்கினாா்.

மறைந்த முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் வியாழக்கிழமை மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் வேலகவுண்டம்பட்டி வரை நடைபெற்ற இப்போட்டியில் 13, 15, 17 வயதிற்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களைப் பெற்றவா்களுக்கு பரிசு ரூ.250 வீதம் மொத்தம் ரூ.70,500-க்கான காசோலைகளை சுற்றுலாத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலா் க.கோகிலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT